காதலியைக் கரம் பிடித்த ‘சுந்தரி’ சீரியல் நடிகர்... குவியும் வாழ்த்து!

அரவிஷ்- ஹரிகா
அரவிஷ்- ஹரிகா

'திருமகள்’ சீரியல் நடிகை ஹரிகாவை காதலித்துத் திருமணம் முடித்துள்ளார் நடிகர் அரவிஷ். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியல் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஹரிகா. இவர் தெலுங்கில் பிஸியாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் தமிழில் ‘திருமகள்’ சீரியல் வாய்ப்புக் கிடைத்தது. இதில் கதாநாயகியாக நடித்துப் பிரபலமானார். இவருக்கும் ‘சுந்தரி’ சீரியல் நடிகர் அரவிஷூக்கும் காதல் மலர்ந்தது. தங்கள் காதலை வெளிப்படையாகவே சமூகவலைதளங்களில் அறிவித்தது இந்த ஜோடி.

இந்த சூழ்நிலையில், நேற்று அரவிஷின் சொந்த ஊரான கோயம்புத்தூரில் திருமணம் முடித்துள்ளார்கள். இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து, ‘இரு இதயங்களின் ஒரே காதல். வாழ்நாள் முழுமைக்குமான மகிழ்ச்சியான நினைவுகள்’ எனக் கூறியுள்ளனர்.

ரிசப்ஷன் நிகழ்வுகளையும் தங்களது யூடியூப் சேனலிலும் லைவாக ஒளிபரப்பியுள்ளது இந்த ஜோடி. இவர்களது திருமணத்தில் பல சின்னத்திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். ரசிகர்களும் தாங்கள் பல நாள் எதிர்பார்த்த பிடித்த ஜோடிக்குத் திருமணம் முடிந்து விட்டது எனச் சொல்லி வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

ராதிகாவுக்கு எதிராக பாஜக நிர்வாகி வேட்புமனு தாக்கல்... விருதுநகரில் வெடித்தது உட்கட்சி பூசல்!

கலங்கிய அண்ணாமலை... கிணறு வெட்ட பூதம் கிளம்பிடுச்சு... மொத்த ஜோலியையும் முடிக்க மெகா திட்டம்!

நான் பேசும்போது எழுந்து போனால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!

திடீரென மயங்கிய அமைச்சர் நேரு... பிரச்சாரம் பாதியிலேயே ரத்து... பதறிய தொண்டர்கள்!

சென்னையில் பரபரப்பு... ரயிலில் பண்டல், பண்டலாக கஞ்சா கடத்தி வந்த பெண் பத்திரிகையாளர் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in