சுந்தரசோழர், மதுராந்தகன், செம்பியன் மாதேவி - ‘பொன்னியின் செல்வன்’ புது அப்டேட்!

சுந்தரசோழர், மதுராந்தகன், செம்பியன் மாதேவி -  ‘பொன்னியின் செல்வன்’ புது அப்டேட்!

‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்கள் குறித்த புதிய தகவல்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மணிரத்னம் படமாக்கியுள்ளார். இந்தப் படத்தில் வந்திய தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.இந்தப் படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் செப்டம்பர் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் நடித்துள்ளனர். பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, வானதியாக சோபிதா துலிபலா ஆகியோர் நடித்துள்ளனர் என அறிவிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று வெளியான அறிவிப்பில் சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ், மதுராந்தகனாக ரகுமான், செம்பியன் மாதேவியாக ஜெயசித்ரா ஆகியோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரிய வேளாராக பிரபுவும், மலையமானாக லாலும், பார்பேந்திர பல்லவனாக விக்ரம் பிரபுவும் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in