நடுரோட்டில் இளைஞரைத் தாக்கிய நடிகை ராதா... சிசிடிவி வீடியோவுடன் காவல்நிலையத்தில் புகார்!

ராதா
ராதா

'சுந்தரா டிராவல்ஸ்’ பட நடிகை ராதா தனது மகனுடன் சேர்ந்து நடுரோட்டில் இளைஞர் ஒருவரைத் தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகாரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராதா
ராதா

நடிகர்கள் முரளி, வடிவேலு இணைந்து காமெடியில் கலக்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ராதா. இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ராதா மீதும் அவரது மகன் தருண் மீதும் பிரான்சிஸ் ரிச்சர்ட் எனும் இளைஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அந்தப் புகாரில் ராதாவும் அவருடைய மகனும் சேர்ந்து தன்னைத் தாக்கியதாக சிசிடிவி வீடியோ ஆதரத்துடன் தெரிவித்துள்ளார் பிரான்சிஸ்.

இதில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் நடத்திய விசாரணையில் பிரான்சிஸ் ரிச்சர்ட் கொடுத்த புகார் உண்மை என்பது தெரிய வந்துள்ளது. நடிகை ராதாவும், அவரது மகன் தருணும் சேர்ந்து பிரான்சிஸை தாக்கும் சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆராய்ந்தனர்.

சிசிடிவி காட்சிகள்...
சிசிடிவி காட்சிகள்...

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீஸாருக்கு, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது. நடிகை ராதாவை கேலி செய்ததாக ரிச்சர்ட் மீது ஏற்கெனவே நிலுவையில் வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு தனது இரண்டாவது கணவர் வசந்தராஜா தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பரபரப்பை நடிகை ராதா பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அமெரிக்காவை அதிரவைக்கும் செக்ஸ் ஸ்டிரைக்... மனைவிகள் போராட்டத்தால் கதறும் கணவர்கள்

மகனுக்கு சீட் இல்லை... திமுக தலைமை மீது பொன்முடி அதிருப்தி!

சுயேச்சைகள் ஆட்டம் ஆரம்பம்... சவப்பெட்டியுடன் வேட்புமனு தாக்கலுக்கு வந்த வேட்பாளர்!

எலெக்‌ஷன் நேரத்துல மூச்சு விடக்கூட பயமா இருக்கு... நடிகர் ரஜினிகாந்த் மிரட்சி!

களமிறங்கும் விஜயகாந்த் குடும்பம்... விருதுநகரில் விஜய பிரபாகரன்; கள்ளக்குறிச்சியில் சுதீஷ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in