பழிவாங்கும் த்ரில்லர் கதையில் சுனேனா

பழிவாங்கும் த்ரில்லர் கதையில் சுனேனா
சுனேனா

நடிகை சுனேனா, 'ரெஜினா’ என்ற பழிவாங்கும் த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்.

நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி உட்பட பல படங்களில் நடிப்பு திறமையால் கவர்ந்தவர் சுனேனா. இவர் இப்போது ரெஜினா என்ற படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார். எல்லோ பியர் புரொடக்‌ஷன் சார்பில் கோயம்புத்தூரை சேர்ந்த சதீஷ் நாயர் தயாரிக்கிறார். இதன் இசை அமைப்பாளரும் இவர்தான். இப்படத்தை இயக்கி தமிழுக்கு அறிமுகமாகிறார், டோமின் டி சில்வா.

இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட "பைப்பின் சுவத்திலே பிராணயம்" மற்றும் "ஸ்டார்" படங்களை இயக்கியவர்.

சதீஷ் நாயர்
சதீஷ் நாயர்

’சாதாரண இல்லத்தரசியாக இருக்கும் பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடிய த்ரில்லர் படமாகவும் இது இருக்கும்’ என்கிறார் சதீஷ் நாயர். இவர் தனது எஸ் என் மியூசிக்கல்ஸ் மூலம் பல சுயாதீன பாடல்களுக்கு இசை அமைத்தவர். பவன் கே.பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் பன்மொழி திரைப்படமாக தமிழில் படமாக்கப்பட்டு இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட இருக்கிறது.

Related Stories

No stories found.