`நீ என் பொம்மை... என் சூப்பர் ஸ்டார்... நடிகை ஜாக்குலினுக்கு சிறையிலிருந்து காதல் கடிதம் அனுப்பிய சுகேஷ்!

`நீ என் பொம்மை... என் சூப்பர் ஸ்டார்... நடிகை ஜாக்குலினுக்கு சிறையிலிருந்து காதல் கடிதம் அனுப்பிய சுகேஷ்!

`நீ எனக்கு ஸ்பெஷல், நீ என் சூப்பர் ஸ்டார்' என்று நடிகையும் காதலியுமான ஜாக்குலினுக்கு சிறையில் இருந்தபடி இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் காதல் கடிதம் எழுதியுள்ளார்.

தொழிலதிபர்களை ஏமாற்றி பலகோடி பண மோசடி செய்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை அமலாக்கத்துறை கைது செய்து டெல்லி சிறையில் அடைத்துள்ளது.

பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசு பொருட்களை வாங்கி கொடுத்ததாக சுகேஷ் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ளது. காதலர்களாக இருவரும் முத்தம் கொடுத்து கொள்ளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியானது. அதே நேரத்தில், சுகேஷ் சந்திரசேகரை 2 முறை சந்தித்தேன் என்றும் அவரால் எனது வாழ்க்கை நரகமாகி விட்டது என்றும் ஜாக்குலின் கூறியிருந்தார்.

நடிகை ஜாக்குலின்- சுகேஷ்
நடிகை ஜாக்குலின்- சுகேஷ்

இந்நிலையில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் பிறந்தநாளுக்கு, சிறையில் இருந்தபடியே, தன் கைப்பட காதல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார் சுகேஷ். அந்த காதல் கடிதத்தில், "இந்த பிரச்சினைகள் அனைத்தும் விரைவில் தீரும். நான் சீக்கிரம் வருவேன். அடுத்த வருடம் பிறந்தநாளை நாம் ஒன்றாகக் கொண்டாடுவோம். நான் அதை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

உலகம் பொறாமைப்படலாம். நீ என் செல்ல பொம்மை. நீ எனக்கு ஸ்பெஷல், நீ என் சூப்பர் ஸ்டார். நீ என் வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவள். பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடு. எதற்கும் பயப்பட வேண்டாம். நான் உனக்காக இருக்கிறேன். எனக்காக இன்னும் ஒரு துண்டு கேக் சாப்பிடு' என கூறியுள்ளார். இந்த காதல் கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in