தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டாரா?- சமந்தா தரப்பு விளக்கம்!

தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டாரா?- சமந்தா தரப்பு விளக்கம்!

நடிகை சமந்தா தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டதாக வந்த செய்திகளுக்கு தற்போது சமந்தா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடியப் பிரபலங்களில் நடிகை சமந்தாவும் ஒருவர். அவரது கைவசம் தற்போது தெலுங்கில் ‘குஷி’, ‘யசோதா’ உள்ளிட்டப் படங்கள் கைவசம் உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே நடிகை சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இல்லை.

இதற்கு காரணம் நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்ட தோல் அலர்ஜிதான் எனவும் தகவல் வெளியானது. ஏற்கெனவே, ‘கடல்’ பட சமயத்தில் நடிகை சமந்தாவுக்கு ஏற்பட்டத் தோல் அலர்ஜி காரணமாகதான் அவர் படத்தில் இருந்து விலகினார்.

இப்போது மறுபடியும், தோல் அலர்ஜி காரணமாகவே அவர் வெளிநாட்டிற்கு சிகிச்சை எடுக்க சென்றுள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து சமந்தாவின் மேலாளர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெளிவுப்படுத்தியுள்ளார். அவர், ``சமந்தாவுக்கு எந்த உடல்நல பாதிப்பும் இல்லை. சிகிச்சைக்காக எங்கும் செல்லவில்லை. அவர் நலமாகவே இருக்கிறார்'' என தெளிவுப்படுத்தியுள்ளார். இந்தப் பிரச்சினை காரணமாகவே இடையில் சமந்தா ‘குஷி’ படத்தில் தன்னுடைய ஷெட்யூலையும் தள்ளி வைத்தார் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

siddamanohar

மீண்டும் தமிழ்ப் படங்களில் அதிகம் கவனம் செலுத்த விரும்பும் சமந்தா சென்னை, பல்லாவரத்தில் வீடு புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காக ஒவ்வொரு ஞாயிறும் சென்னை வந்து போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், நடிகர் விஜய்யின் 67-வது படத்தில் சமந்தாவை வில்லியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in