‘விடுதலை படப்பிடிப்பு நிறைவு’ -தளத்திலிருந்து சுதா கொங்கரா தந்த அப்டேட்!

’விடுதலை’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன் - சுதா கொங்கரா
’விடுதலை’ படப்பிடிப்பு தளத்தில் வெற்றிமாறன் - சுதா கொங்கரா

விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக, படப்பிடிப்பு தளத்திலிருந்து சுதா கொங்கரா பதிவு செய்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்திலான ’விடுதலை’ திரைப்படம் 2 பாகங்களாக தயாராகிறது. படம் வெளியாகும் முன்னரே அதன் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமங்கள் நல்ல விலைக்குப் போயுள்ளன. ரசிகர்கள் மத்தியிலும் விடுதலைக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் விடுதலை படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற இயக்குநர் சுதா கொங்கரா, படப்பிடிப்புக்கு இதுதான் கடைசி நாள் என்று தனது நண்பர் வெற்றிமாறன் தெரிவித்ததாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் ’சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பில் சுதா காயமடைந்தார். கையில் கட்டுபோட்ட நிலையில் ஓய்வெடுக்கும் நிலைக்கும் ஆளான சுதா, ’நான் விரும்பாத இடைவேளை இது. இன்னும் ஒரு மாதத்துக்கு ஓய்வெடுத்தாக வேண்டும்’ என்று கவலை தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு மாதமான பின்னரும் கைக்கட்டுடனே ’விடுதலை’ படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்று இருக்கிறார். சுதா காயமடைந்ததில் இந்தி ’சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கான படப்பிடிப்பு தள்ளிவைக்கப்படுவதாக அப்போதே அறிவிப்பானது.

2020ல் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம், வர்த்தக மற்றும் விமர்சன ரீதியிலும் பெயர் பெற்றது. மேலும் விருதுகளையும் அள்ளியது. இதே திரைப்படம் இந்தியில் உருவாக, சூர்யா அதனை இணைந்து தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, சூர்யா கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in