விஜய்க்கு கதை ரெடி: இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த மூவ்

விஜய்க்கு கதை ரெடி: இயக்குநர் வெற்றிமாறனின் அடுத்த மூவ்

இயக்குநர் வெற்றி மாறன் தற்போது மீண்டும் விஜய்க்காக கதை ஒன்றை தயார் செய்துள்ளார். இந்த கதையை விஜய்யிடம் சொல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறன் தற்போது `விடுதலை' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 'விடுதலை' படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, சூர்யா நடிக்கும் 'வாடிவாசல்' படத்தின் முக்கிய படப்பிடிப்பைத் தொடங்குகிறார் வெற்றி மாறன். ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்திற்கு சூர்யா முன்னதாக படத்திற்கான ஒரு சிறிய ஷெட்யூலை முடித்துள்ளார். மேலும் காளைகளிடம் பயிற்சியும் எடுத்து வருகிறார் சூர்யா.

இந்நிலையில் விஜய்க்கும் ஒரு கதையை தயாராக வைத்துள்ளாராம் வெற்றிமாறன். விஜய் தற்போது வம்சி பைடிபல்லியுடன் 'தளபதி 66' படத்திற்காக பணிபுரிந்து வருகிறார். மேலும் படம் 2023 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்ததாக 'தளபதி 67' படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைவதாக கூறப்படுகிறது. அதனால், விஜய் மற்றும் வெற்றி மாறன் படத்திற்கு காலதாமதமாகும்.

வெற்றி மாறன் கடந்த காலத்தில் விஜய்யிடம் ஒரு கதையை சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த கதை விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகவில்லையாம். அதே சமயம் இயக்குநரின் அடுத்த திட்டத்திற்காக காத்திருப்பேன் என்று விஜய் உறுதிப்படுத்தியிருந்தார் என்று கூறியிருந்த நிலையில்தான் புது கதையை சொல்ல ஆயத்தமாகிறாராம் வெற்றிமாறன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in