`விரும்பினா பாராட்டுங்க, இல்லைனா புறக்கணிங்க’: நடிகையின் டச்சிங் பதிவு

`விரும்பினா பாராட்டுங்க, இல்லைனா புறக்கணிங்க’: நடிகையின் டச்சிங் பதிவு

``உருவகேலி செய்வதை நிறுத்துங்கள்'' என்று பிரபல நடிகை பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படம் மூலம் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அடுத்து இப்படை வெல்லும், சத்ரியன், தேவராட்டம், துக்ளக் தர்பார், எப்.ஐ.ஆர் உட்பட சில படங்களில் நடித்துளளார். இவர், கடந்த சில மாதங்களாக உருவ கேலிக்கு ஆளாகி வருகிறார். இதற்கு எதிராக அவர் அவ்வப்போது பதிலளித்து வந்தாலும், சமூக வலைதளத்தில் தொடர்ந்து அவரை நெட்டி சன்ஸ் கேலி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்ஸ்டாவில் அவருக்கு வந்த சில கமென்ட்களை பகிர்ந்துள்ள அவர், அதற்குப் பதிலளித்துள்ளார். அதில் அவர், ``ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறோம். ஆனால், எல்லோரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சிலர் இயற்கையாக அப்படி இருக்கலாம். சிலர் வேறு பிரச்னை காரணமாக உடல் எடை அதிகரித்திருக்கலாம். அதனால், உருவகேலி செய்வதை நிறுத்துங்கள்.

ஒருவரை கேலி செய்வதன் மூலம் அவர்களின் உடல் எடையை குறைக்க முடியாது. அதன் மூலமாக அவர்களின் நம்பிக்கையை குலைக்கிறீர்கள். நான் சிலரை போல மனிதர்களின் உடல், நிறம் அல்லது வளர்ப்பு பற்றி பேசுபவளல்ல. அதுபற்றி நினைப்பதும் இல்லை. யாராக இருந்தாலும் மரியாதை கொடுங்கள். நீங்கள் விரும்பினால் பாராட்டுங்கள், இல்லை என்றால் புறக்கணித்து விடுங்கள். ஆனால், கொடுமைப்படுத்துவது தவறு. வாழு, வாழ விடு'' என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.