சினிமாவானது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்

சினிமாவானது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக நடந்த போராட்டத்தை மையமாக வைத்து 'முத்துநகர் படுகொலை' (PEARLCITY MASSACRE) என்ற படம் உருவாகி இருக்கிறது.

2017-ம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து ’மெரினா புரட்சி ’என்ற ஆவணத் திரைப்படத்தை நாச்சியாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. எம்.எஸ்.ராஜ் இயக்கி இருந்தார்.

தற்போது இந்த நிறுவனம், தருவை டாக்கீஸுடன் இணைந்து 2018 மே மாதம் 22 மற்றும் 23 தேதிகளில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தை ’முத்துநகர் படுகொலை’ என்ற பெயரில் புலனாய்வு ஆவணப்படமாக தயாரித்துள்ளது. எம்.எஸ். ராஜ் இயக்கியுள்ளார்.

படம் பற்றி அவர் கூறும்போது, 'இது புலனாய்வு ஆவணத்திரைப்படமாக உருவாகியுள்ளது. அங்கு நடந்த கொடூர சம்பவங்களை சாட்சியங்களுடன் பதிவு செய்திருக்கிறோம். அரசு இயந்திரம் செய்த தவறுகளை ஆதாரங்களுடன் படமாக்கியுள்ளோம். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்த படத்தை திரையிட்டோம். விரைவில் நீதி வழங்க வேண்டும் என்று கோரி கையெழுத்திட்டனர். உலகெங்கும் இந்தப் படத்தை திரையிட்டு பார்வையாளர்களின் கையெழுத்துக்களை திரட்டி, தமிழக அரசிடம் வழங்க இருக்கிறோம்' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in