`என்னை மோசமாக பேசுகிறார்'- நடிகர் ராஜ்கிரண் மீது வளர்ப்பு மகள் அதிர்ச்சி புகார்

`என்னை மோசமாக பேசுகிறார்'- நடிகர் ராஜ்கிரண் மீது வளர்ப்பு மகள் அதிர்ச்சி புகார்

நடிகர் ராஜ்கிரணின் தூண்டுதலின் பேரில் தன் மீது காவல்நிலையத்தில் பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை மோசமாக பேசி வருவதாகவும் வளர்ப்பு மகள் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்புமகள் பிரியா முனீஷ்ராஜா பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது தாய் பத்ம ஜோதி என்கிற கதீஜா ராஜ்கிரண், ராஜ்கிரண் சாரின் தூண்டுதலின் பேரில் காவல்நிலையத்தில் என் மீது பொய் புகார் அளித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு, யூடியூபில் தன்னை குறித்து வெளியாகும் வீடியோக்களில் ஆள் வைத்து மோசமான விமர்சனங்களை பதிவு செய்வது, செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு, உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் தன்னை பற்றி தனது தாய் மோசமாக பேசுவதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும், தன்னுடைய அப்பா மற்றும் உறவினர்கள் தனக்கு வழங்கிய நகைகள் நடிகர் ராஜ்கிரண் வீட்டில் உள்ளது. அதை தன்னிடம் கொடுக்குமாறு கேட்டேன். அதோடு என்னுடைய நேரடி தந்தையை சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டு இருந்தேன். இதன் காரணமாக தனது தந்தை மீதும், வெளிநாட்டில் உள்ள எனது தம்பி, என் மீதும், எனது கணவர் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக முசிறி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இருந்து சம்மன் வந்துள்ளது. அதுதொடர்பான விசாரணைக்காக காவல்நிலையத்தில் இன்று (டிச.1) ஆஜராக உள்ளேன். அதன்பிறகு செய்தியாளர்களை சந்திக்க தயாராக உள்ளேன்" என்று கூறியுள்ளார் பிரியா முனீஷ்ராஜா.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in