‘எங்கே முடிந்ததோ அங்கேயே தொடக்கம்’- மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கும் விஜே தீபிகா நெகிழ்ச்சி

விஜே தீபிகா நெகிழ்ச்சி
விஜே தீபிகா நெகிழ்ச்சி‘எங்கே முடிந்ததோ அங்கேயே தொடக்கம்’- மீண்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்கும் விஜே தீபிகா நெகிழ்ச்சி

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீண்டும் ஐஷ்வர்யாவாக நடிக்க வந்தது குறித்து விஜே தீபிகா நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஐஷ்வர்யா கதாபாத்திரத்தில் இருந்து சாய் காயத்ரி விலகியுள்ள நிலையில் தற்போது விஜே தீபிகா மீண்டும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தளத்தில் இருந்து புகைப்படம் பகிர்ந்து அவர் தெரிவித்திருப்பதாவது, ‘அதிர்ஷ்டம் ஒருமுறைதான் கதவைத் தட்டும் என்று சொல்வார்கள். அது சரிதான். ஆனால், முயற்சியும் நம்பிக்கையும் ஒருமுறை இல்லை ஆயிரம் கதவுகளை திறக்க செய்யும்.

ஐஷ்வர்யாவாக என்னுடைய பயணம் பாதியில் முடிந்தது. ஆனால், இப்போ எங்கே முடிந்ததோ அங்கேயே ஒரு தொடக்கம் வந்திருக்கிறது. எல்லாருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான் சொல்ல போகிறேன். ‘ஒரு பொருள் இல்லாதபோதுதான் அதன் வலி நமக்குப் புரியும்’. அந்தப் பொருள் எனக்கு இப்போ திரும்ப கிடைத்திருக்கிறது. அதன் மதிப்பு எனக்கு நன்றாகவே தெரியும். உங்கள் அனைவரது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தீபிகாவுக்கும், ஐஷ்வர்யாவுக்கும் உங்களுடைய வாழ்த்து எப்போதும் தேவை’ என நெகிழ்ச்சியாக பதிவு செய்திருக்கிறார் .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in