அதிகாரபூர்வமாக ரூ.2,100-க்கு விற்கப்பட்ட ’ஆர்ஆர்ஆர்’ டிக்கெட்!

அதிகாரபூர்வமாக ரூ.2,100-க்கு விற்கப்பட்ட ’ஆர்ஆர்ஆர்’ டிக்கெட்!

’ஆர்ஆர்ஆர்’ படத்துக்கான டிக்கெட் அதிகாரபூர்வமாக ரூ.2,100-க்கு விற்கப்பட்டுள்ளது.

ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில், ராஜமவுலி இயக்கியுள்ள படம், ’ஆர்ஆர்ஆர்’. டிவிவி தானய்யா தயாரித்துள்ள இந்தப் படத்தில் இந்தி நடிகை ஆலியா பட், இந்தி நடிகர் அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, வெளிநாட்டு நடிகை ஒளிவியா மாரிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பயங்கர எதிர்பார்ப்புடன் நாளை வெளியாகிறது.

படத்துக்கான டிக்கெட் புக்கிங் எப்போதோ தொடங்கிவிட்ட நிலையில், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களில் பல தியேட்டர்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹவுஸ்புல் போர்டு தொங்குவதை பார்க்க முடிகிறது. இந்த மாநிலங்களில் முதல் நாள் வசூலில் இந்தப் படம் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநிலங்களைவிட, டெல்லி, மும்பையில் இந்தப் படத்தின் முதல் நாள், முதல் காட்சி டிக்கெட்டுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதனால், டெல்லி ஆம்பியன்ஸ் மாலில் உள்ள பிவிஆர் தியேட்டரில், இந்தப் படத்தின் இந்திப் பதிப்புக்கான டிக்கெட் ரூ.2,100-க்கு விற்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் விற்பனை அதிகாரபூர்வமாகவே விற்கப்பட்டுள்ளது. புக் மை ஷோ செயலியின் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஒரு டிக்கெட், அதிகாரபூர்வமாக இவ்வளவு ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பது இதுதான் முதன்முறை என்கிறார்கள். அடுத்ததாக, மும்பை லோயர் பரேலில் உள்ள பிவிஆர் தியேட்டரில் இந்தப் படத்துக்கான டிக்கெட் ரூ. 1320 -க்கும் புனேவில் 1250 ரூபாய்க்கும் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், அங்கும் இந்தப் படம் வசூலில் சாதிக்கும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in