நடிகை ஸ்ரீப்ரியா மகள் திருமணம்

சினேகா சேதுபதி
சினேகா சேதுபதி

நடிகை ஸ்ரீப்ரியா மகள் சினேகா திருமணம், லண்டனில் நடக்கிறது.

திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி- நடிகை ஸ்ரீப்ரியா தம்பதியின் மகள் சினேகா சேதுபதி. இவருக்கும் ராஜேஷ் சர்மா மற்றும் சாதனா தம்பதியின் மகன் அன்மோல் சர்மாவுக்கும் வரும் 6-ம் தேதி லண்டனில் திருமணம் நடக்கிறது. தற்போதைய கரோனா சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும் விசா நடைமுறைக்கு உதவும் வகையிலும், திருமணம் லண்டனில் பதிவு செய்யப்பட இருக்கிறது.

ராஜ்குமார் சேதுபதி- ஸ்ரீப்ரியா
ராஜ்குமார் சேதுபதி- ஸ்ரீப்ரியா

ஏப்ரல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தென்னிந்திய முறைப்படி சென்னையில் பிரமாண்ட திருமண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைத்து நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் முறையான அழைப்பிதழ் அனுப்பப்படும். சினேகாவும் அன்மோல் ஷர்மாவும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தை இணைந்து தொடங்கும் தருணத்தில், அனைவரின் ஆசீர்வாதங்களையும் பிரார்த்தனைகளையும் கோருகிறோம் என்று ஸ்ரீப்ரியாவும் அவர் கணவரும் தெரிவித்துள்ளனர்.

சினேகா சேதுபதி
சினேகா சேதுபதி

லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில் சட்டம் பயின்ற சினேகா, அங்கேயே தனது முதுகலை மற்றும் சட்டப் பயிற்சிப் படிப்பையும் படித்துள்ளார். இரட்டை எம்பிஏ படித்த அன்மோல் சர்மா, லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரிகிறார். இவரது குடும்பம் கடந்த 25 ஆண்டுகளாக இங்கிலாந்தில் தொழில் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in