’கே.ஜி.எஃப்’ ஹீரோயின் கேட்ட சம்பளம்: அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்

’கே.ஜி.எஃப்’ ஹீரோயின் கேட்ட சம்பளம்: அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர்

பிரசாந்த் நீல் இயக்கிய ’கே.ஜி.எஃப்’, 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றவை. யாஷ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்த ‘கே.ஜி.எஃப் சாப்டர் 2’ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனைப் படைத்துள்ளது.

இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின்னர் இயக்குநர் பிரசாந்த் நீல், ஹீரோ யாஷ் ஆகியோர் தங்கள் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் ஹீரோயின் ஸ்ரீனிதி ஷெட்டியும் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர், தனது படத்துக்கு அவரிடம் பேசியதாகவும் அவர் 2 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அதிர்ச்சி அடைந்த அந்த தயாரிப்பாளர், கே.ஜி.எஃப் படம் ஹிட்டானதற்கும் ஸ்ரீனிதிக்கும் தொடர்பில்லை என்பதை அவர் உணரவில்லை என்றும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நடிகை, இவ்வளவு சம்பளம் கேட்டால் எப்படி நடிக்க வைப்பது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in