
தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோருக்கு தேசிய விருதுகனை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
இந்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 69-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2021-ஆம் ஆண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. இதில் 'புஷ்பா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
இ.வி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் கருவறை குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்தது. இந்த விருதை இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். மேலும், கடைசி விவசாயி’ படத்திற்காக சிறந்த தமிழ் திரைப்பட தேசிய விருதை மணிகண்டன் பெற்றார். ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ படத்திற்காக சிறந்த கல்வி திரைப்பட தேசிய விருதை பி.லெனின் பெற்றார். இதேபோல் நடிகைகள் ஆலியா பட், க்ரித்தி சனோன் ஆகியோருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
இதையும் வாசிக்கலாமே...
அமைச்சர் அன்பில் மகேஷை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்!
சிவப்பு நிறத்தில் மாறிய கடல்... செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்
பூங்காவில் அத்துமீறிய காதலர்கள்... அலற விட்ட போலீஸார்!
தொடரும் போர்... 10 லட்சம் மக்கள் வெளியேறிய பரிதாபம்
டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.56,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!