நடிகர் பிரசாந்த் மீது வெளிநாட்டுப் பெண் பகீர் புகார்: விசாரணையில் போலீஸ் அதிரடி முடிவு

நடிகர் பிரசாந்த் மீது வெளிநாட்டுப் பெண் பகீர் புகார்: விசாரணையில் போலீஸ் அதிரடி முடிவு

நடிகர் பிரசாந்த் 10 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக சுவிட்சர்லாந்து விமான நிலைய பெண் ஊழியர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த குமுதினி என்ற பெண் சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் இரு தினங்களுக்கு முன்பு பாண்டிபஜார் காவல் நிலையத்தில் வாய்மொழியாக புகார் ஒன்றை அளித்தாக கூறப்படுகிறது. அதில், தன்னிடம் நடிகர் பிரசாந்த் 10 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்ததாகவும், நடிகர் பிரசாந்த்திடம் இருந்து பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து நடிகர் தியாகராஜனின் உதவியாளர் ஆனந்த், நடிகர் பிரசாந்த் மீது பொய்யான குற்றசாட்டு கூறிவரும் குமுதினி மீது இன்று பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், குமுதினி என்ற பெண் நடிகர் பிரசாந்த் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும், இதே பெண் மூன்று முறை தங்களது வீட்டிற்கு வந்து பிரச்சினையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இருதரப்பினர் அளித்த புகார் குறித்து பாண்டிபஜார் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் புகார் அளித்த பெண் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவரது புகாரில் முகாந்திரம் இல்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து நடிகர் பிரசாந்த்திடம் கேட்டபோது அப்படி எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. அந்த பெண் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in