‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் ஸ்ரீசாந்த் கேரக்டர் என்ன?

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் ஸ்ரீசாந்த் கேரக்டர் என்ன?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் படம், ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. பிரபு, நடன இயக்குநர் கலா, சீமா, ரெடின் கிங்ஸ்லி, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கிறார். இதில் விஜய் சேதுபதி, ராம்போ எனும் கேரக்டரில் நடிக்கிறார். சமந்தா, கதீஜா எனும் கேரக்டரிலும் நயன்தாரா, கண்மணி என்ற கேரக்டரிலும் நடிக்கின்றனர். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.

சமந்தா, ஸ்ரீசாந்த்
சமந்தா, ஸ்ரீசாந்த்

இந்தப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பெற்றுள்ளது. படம் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிக்கிறார். அவர் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பது பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அவர் முகமது மோபி என்ற பெயரில், சமந்தாவின் பாய்பிரண்டாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.