ஸ்ரீகுமாரன் தம்பிக்கு 'வயலார் விருது'... நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து!

ஸ்ரீகுமாரன் தம்பி
ஸ்ரீகுமாரன் தம்பி

கவிஞர் ஸ்ரீகுமாரன் தம்பிக்கு 'வயலார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

கவிஞர், பாடலாசிரியர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நாவலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ஶ்ரீகுமாரன் தம்பி. ‘ஜீவிதம் ஒரு பெண்டுலம்’ எனும் நூலுக்காக இவருக்கு கேரள அரசின் மிக உயரிய விருதான ‘வயலார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்து அவருடைய படத்தில் நடித்திருப்பதையும் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து கமல் தனது ட்விட்டரில், " கவிஞர், பாடலாசிரியர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், நாவலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட மலையாளக் கலைஞன் என் பிரியத்திற்குரிய ஶ்ரீகுமாரன் தம்பி.

இவர் இயக்கிய ‘திருவோணம்’ எனும் திரைப்படத்தில் பிரேம் நசீர், சாரதா ஆகியோருடன் நானும் பிரேம்குமார் எனும் பாத்திரமேற்று நடித்திருக்கிறேன். ‘ஜீவிதம் ஒரு பெண்டுலம்’ எனும் சுயசரிதை நூலுக்காக ஶ்ரீகுமாரன் தம்பி அவர்களுக்கு கேரளத்தின் உயரிய விருதான ‘வயலார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. ஶ்ரீகுமாரன் தம்பி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in