விரைவில் வருகிறது 'ஸ்குயிட் கேம்' 2-வது சீசன்: நெட்பிளிக்ஸ் அறிவிப்பு

விரைவில் வருகிறது 'ஸ்குயிட் கேம்' 2-வது சீசன்: நெட்பிளிக்ஸ் அறிவிப்பு

உலகமெங்கும் வரவேற்பைப் பெற்ற ‘ஸ்குயிட் கேம்’ வெப் தொடரின் அடுத்த சீசன் விரைவில் வெளியாக இருக்கிறது.

தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த ’ஸ்குயிட் கேம்’ என்ற திகில் தொடர், நெட்பிளிக்ஸில் கடந்த ஆண்டு வெளியானது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு உள்ளூர் தொடர்களை, இந்தத் தொடர் பின்னுக்குத் தள்ளியது. உலகில் அதிகம் பேர் விரும்பிப் பார்க்கும் இணைய தொடராகவும் இது உருவெடுத்தது.

இந்தத் தொடருக்கு கல்வியாளர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வன்முறை நிறைந்த இந்த தொடரை பள்ளி மாணவ,மாணவியர் பார்க்கக்கூடாது என்று கூறி வந்தனர். இருந்தும் இந்த தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Noh Juhan | Netflix

இந்நிலையில் இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு வந்தனர். நெட்ஃப்ளிக்ஸ் அதிகாரிகள் ‘ஸ்குயிட் கேம்’ இரண்டாவது சீசன் வரும் என்று உறுதி அளித்து வந்தனர். இந்நிலையில் ’குயிட் கேம்’ அடுத்த சீசன் பற்றி நெட்பிளிக்ஸ் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

அதோடு இந்த தொடரின் இயக்குநர், தயாரிப்பாளர் வாங் டாங்-யங்கின் பதிவையும் ரசிகர்களுக்காகப் பகிர்ந்துள்ளது. அதில், "ஸ்குயிட் கேம் முதல் சீசனை உயிர்ப்பிக்க 12 வருடங்கள் ஆனது. ஆனால் நெட்பிளிக்ஸின் மிகவும் பிரபலமான தொடராக மாற, வெறும் 12 நாட்கள்தான் ஆனது. எங்கள் தொடரைப் பார்த்த ரசிகர்களுக்கு நன்றி. இப்போது சீசன் 2 வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in