ஆண்ட்ரியா படத்துக்காக நாய்களுக்கு ஸ்பெஷல் பயிற்சி

நோ என்ட்ரி- ஆண்ட்ரியா
நோ என்ட்ரி- ஆண்ட்ரியா

ஆண்ட்ரியா நடிக்கும் ’நோ என்ட்ரி’ என்ற படத்துக்காக, நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.

ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடிக்கும் படம், ’நோ என்ட்ரி’. ரன்யா ராவ், ஆரவ் கண்ணதாசன், மானஸ், ஜெயஶ்ரீ உட்பட பலர் நடித்துள்ளனர். அழகு கார்த்திக் இயக்கியுள்ள இந்த த்ரில்லர் படத்தை ஶ்ரீதர் தயாரித்துள்ளார். அஜீஸ் இசையமைக்கிறார். ரமேஷ் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நோ என்ட்ரி- ஆண்ட்ரியா
நோ என்ட்ரி- ஆண்ட்ரியா

சுற்றுலாவிற்காக மேகாலயாவின் சிரபுஞ்சி செல்லும் ஒரு ஜோடி, அங்கு தங்கவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அப்போது மனிதர்களை வேட்டையாடும் நாய்க் கூட்டத்திடம் மாட்டிக்கொள்கின்றது. அவர்கள் அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை பரபரப்புடன் சொல்லும் படம் இது.

சிரபுஞ்சியின் காடுகளையும், மலைகளுக்கு நடுவே புதைந்து கிடக்கும் குகைகளையும் இந்தப் படத்தில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாய்களுக்கு 25 நாட்கள் ஸ்பெஷல் டிரெய்னிங் கொடுத்து படமாக்கியுள்ளனர். கோவிட்டுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் பல தடைகளை கடந்து அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in