சசிகுமார் படத்துக்காக ‘மாசானக் கொள்ளை’ பாடல் காட்சி

சசிகுமார் படத்துக்காக ‘மாசானக் கொள்ளை’ பாடல் காட்சி

விஜய் ஆண்டனியின் ‘சலீம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிர்மல் குமார். அடுத்து அரவிந்த் சாமி நடித்த ‘சதுரங்க வேட்டை 2’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியாகவில்லை.

இதையடுத்து அவர் இயக்கிவரும் படம், ’நா நா’. சசிகுமார், சரத்குமார் நடிக்கும் இந்தப் படத்தை கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்கிறார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்ட நிலையில், ’மாசானக் கொள்ளை’ பாடல் ஒன்றை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

இதுபற்றி படக் குழுவினரிடம் விசாரித்தபோது, 'இது ஆக்‌ஷன் த்ரில்லர் படம். சென்னை, மும்பை, ஹைதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் இதன் ஷூட்டிங் நடந்துள்ளது. கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ’மாசானக் கொள்ளை’ பாடல் காட்சியை வடசென்னை அருகே படம்பிடித்தோம். இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே பாக்கி இருக்கிறது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது’ என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in