சிவகார்த்திகேயன், கார்த்தி படங்களுக்கு அடித்தது ஜாக்பாட்: சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி!

சிவகார்த்திகேயன், கார்த்தி படங்களுக்கு அடித்தது ஜாக்பாட்: சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும், புதுப்பட வரவுகளால் தமிழக திரையரங்குகளில் திருவிழா போல ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழியும். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளிக்கு ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி திரை நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகவில்லை. வளர்ந்து வரும் நடிகர்களான கார்த்தி நடித்துள்ள 'சர்தார்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள `பிரின்ஸ்' ஆகிய படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளன. கரோனா காரணமாகக் கடந்த இரண்டு வருடங்களாகத் திரையரங்குகள் நஷ்டத்தைச் சந்தித்து வந்தன.

இந்நிலையில் தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாக உள்ளதால் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும் எனத் தமிழக அரசிற்குத் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கைக்குச் செவி சாய்க்கும் விதமாகத் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் 21-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஏழு நாட்களுக்குச் சிறப்புக் காட்சிகளைத் திரையிடத் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்குத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in