'எஸ்.பி.பி. மணி மண்டபப் பணிகள் அடுத்த வருடம் தொடங்கும்’: எஸ்.பி.பி.சரண்

'எஸ்.பி.பி. மணி மண்டபப் பணிகள் அடுத்த வருடம் தொடங்கும்’: எஸ்.பி.பி.சரண்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உட்பட பல்வேறு மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர், கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார். இது உலகெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் உடல், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 76-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் எஸ்.பி.பி.யின் மனைவி சாவித்திரி மற்றும் அவரது மகன் சரண் மற்றும் குடும்பத்தினர் இன்று அஞ்சலி செலுத்தினர். அப்போது 6 டன் எடையுள்ள, ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்பிபியின் உருவப்படத்தை அவரது மகன் சரண் திறந்து வைத்தார்.

எஸ்.பி.பி.சரண்
எஸ்.பி.பி.சரண்

பின்னர், இன்று ஒரு நாள் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக் கும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப் பட்டது. இதையடுத்து, ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி னர்.

எஸ்.பி.பி-யின் நினைவிடத்தில் மணி மண்டபம் கட்டுவதற்கான பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எஸ்.பி.பி. சரண் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in