நாளை கூடுகிறது நடிகர் சங்கப் பொதுக்குழு

நாளை கூடுகிறது நடிகர் சங்கப் பொதுக்குழு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 66-வது பொதுக்குழு கூட்டம், சென்னை சாந்தோம் பள்ளியில் நாளை நடைபெறுகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2019-ம் ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. பாண்டவர் அணி தரப்பில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி போட்டியிட்டனர்.

சங்கரதாஸ் அணி தரப்பில், தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் போட்டியிட்டனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள், சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 20-ம் தேதி எண்ணப்பட்டன. தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நாளை (மே 8-ம் தேதி) நடைபெறுகிறது. சென்னை, சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கான நிதியை திரட்டுவதற்கு ஒப்புதல் பெறுவது, நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் உட்பட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in