ரஜினி வைத்த கோரிக்கை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு

ரஜினி வைத்த கோரிக்கை: தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் திடீர் சந்திப்பு

நடிகர் ரஜினிகாந்த்தை தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று திடீரென சந்தித்து பேசினர்.

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகள் 3 வருடத்துக்கு பின் அண்மையில் எண்ணப்பட்டது. இதில், தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் தேர்வாகினர்.

நடிகர்கள் ராஜேஷ், பிரசன்னா, சிபிராஜ், நந்தா, ரமணா, சரவணன், ஸ்ரீமன், மனோபாலா, அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, விக்னேஷ், தளபதி தினேஷ், பிரேம்குமார், ஜெரால்டு, ரத்னப்பா, பிரகாஷ், ஹேமச்சந்திரன், காளிமுத்து, வாசுதேவன், நடிகைகள் குஷ்பு, லதா, கோவை சரளா, சோனியா ஆகிய 24 பேர் செயற்குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், விஷால், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதைப்போல் நடிகர் கமல்ஹாசனையும் அவர்கள் சந்தித்து பேசினர். இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தை இன்று நடிகர்கள் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி மற்றும் பூச்சிமுருகன் உள்ளிட்டோர் சந்திப்பு பேசினர். தென்னிந்திய நடிகர் சங்க பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கமாக மாற்ற ரஜினி கோரிக்கை வைத்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in