மகிழ்ச்சியில் திளைக்கும் ரஜினி குடும்பம்: விரைவில் காலடி வைக்கும் புதுவரவு!

சவுந்தர்யா
சவுந்தர்யா

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா தன் முதல் கணவரைப் பிரிந்து வாழ்ந்தார். தொழிலதிபரும் நடிகருமான விசாகன் வணங்காமுடிக்கும், சவுந்தர்யாவுக்கும் கடந்த 2019 பிப்ரவரி 11-ல் சென்னையில் திருமணம் நடந்தது.

சவுந்தர்யாவுக்கு முதல் திருமணம் மூலம் வேத் கிருஷ்ணா என்கிற மகன் இருக்கிறார். வேத் கிருஷ்ணாவைத் தன் சொந்த மகனாகப் பாசமாகக் கவனித்துக்கொள்கிறார் விசாகன். இந்நிலையில் சவுந்தர்யா கர்ப்பமாகியிருக்கிறார். இதையடுத்து விசாகன் வீட்டில் வைத்தே கடந்த வாரம் சவுந்தர்யாவுக்கு வளைகாப்பு நடந்தது. அந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்கள் ஒரு சிலரும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

வரும் அக்டோபர் மாதம் சவுந்தர்யாவுக்குப் பிரசவம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நல்ல செய்தி அறிந்த ரசிகர்களும், நலம் விரும்பிகளும் ரஜினி குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டுமே மகன்கள். இளைய மகளுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தை. இந்தக் குழந்தை பெண்ணாகப் பிறக்கட்டும் என ரசிகர்கள் வாழ்த்திவருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in