பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி சிரிகோ காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி சிரிகோ காலமானார்!

பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி சிரிகோ காலமானார். அவருக்கு வயது 79.

பிரபல ஹாலிவுட் நடிகர் டோனி சிரிகோ. ஏராளமான திரைப் படங்களில் கேங்ஸ்டராக இவர் நடித்துள்ளார். குட்ஃபெல்லாஸ், மோப் குயின், லவ் அண்ட் மனி, பிங்கர்ஸ், த ஒன் மேன் ஜூரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். 1974-ம் ஆண்டு கிரேசி ஜோ என்ற படம் மூலம் அறிமுகமான அவர், கடைசியாக கடந்த 2017-ம் ஆண்டு வெளியான வொண்டர்புல் வீல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

ஹெச்பிஓ சேனலில் வெளியான ’த சோப்ரானோஸ்’ என்ற தொடரில் பாலி வால்னெட் என்ற கொடூரமான கேங்ஸ்டராக நடித்து புகழ்பெற்றிருந்தார். நடிக்க வருவதற்கு முன் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள இவர், 28 முறை கைது செய்யப்பட்டுள்ளார். 1971-ம் ஆண்டு மிரட்டி பணம் பறித்தல், கொடூரமான ஆயுதங்களை வைத்திருத்தல் என்பது உள்ளிட்ட குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு 20 மாதங்கள் சிறையில் இருந்துள்ளார்.

நியூயார்க்கில் தனது மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்த டோனி சிரிகோ, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இதை அவர் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுபற்றி சிரிகோவின் சகோதரர் ராபர்ட் கூறும்போது, ``டோனி சிரிகோ மறைவை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடன் எங்களுக்கு இனிமையான நினைவுகள் உள்ளது. எங்கள் தனிப்பட்ட உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in