சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஒரு காட்சிக்குச் செலவு 8 கோடி: ஆச்சரியப்படுத்தும் வெற்றிமாறனின் 'விடுதலை'

சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஒரு காட்சிக்குச் செலவு 8 கோடி: ஆச்சரியப்படுத்தும் வெற்றிமாறனின் 'விடுதலை'

நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் வெற்றிமாறன் இயக்கும் 'விடுதலை' படத்தின் ஒரு காட்சிக்கு 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரயில் நிலையம் செட் போடப்பட்டுள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் 2 பாங்களாக வெளியாகும் என அறிவக்கப்பட்டுள்ளது. கதையின் நாயகனாக முதல்முறையாக சூரி நடிக்கும் 'விடுதலை' படம், காவல் துறை பயிற்சி மையங்களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 4 கோடி பட்ஜெட்டில் ஆரம்பித்த இப்படம் தற்போது 40 கோடியை நெருங்கி விட்டதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'நீதானே என் பொன்வசந்தம்' போன்ற படங்களை தயாரித்த எல்ரெட் குமாரின் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இதில் ஒரு ரயில் விபத்து காட்சி அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் பாலம் ஆகியவற்றிக்கு செட்டுகள் போடப்பட்டு வருகிறது. அதாவது 1990-ம் ஆண்டு கால கட்டத்தில் உள்ளது போலவே ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 8 கோடி செலவில் இந்த ரயில் விபத்து காட்சி எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முக்கிய திருப்பமாக இந்த காட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'விடுதலை' படம் வெளியான பிறகு இந்த காட்சி பெரிய அளவில் பேசப்படுவதுடன் என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in