சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் சூரி: வெளியான புதுப்பட அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் & சூரி
சிவகார்த்திகேயன் & சூரி

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிகர் சூரி நடிக்க இருக்கும் புதிய பட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவித்திருக்கிறது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும், ‘கூழாங்கல்’ படத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த இயக்குநரான பி.எஸ். வினோத்ராஜ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இது குறித்து தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் கூறும்போது, ​​“ஒரு படைப்பாளி தன்னுடைய சொந்த மண்ணின் கூறுகளை அதன் தன்மை மாறாது படமாக்கித் தந்து அது சர்வதேச அளவுகளில் அங்கீகாரம் பெறுவது திரைப்படத்துறையின் விலைமதிப்பற்ற தருணம் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வகையில், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் மதிப்புமிக்க 'டைகர் அவார்ட்' வென்று, 'கூழாங்கல்' திரைப்படத்தின் மூலம் நம் தமிழ்த் திரையுலகைப் பெருமைப்படுத்திய இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் ஒரு ஜெம் என்று சொல்வேன். எனது நெருங்கிய நண்பரான சூரியுடன் இந்தப் படத்தில் பணிபுரிவது எனக்கு உற்சாகமான விஷயம். மேலும், அன்னா பென் போன்ற திறமை மிக்க நடிகை எங்கள் படத்தில் இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

‘கொட்டுக்காளி’
‘கொட்டுக்காளி’

இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் கூறும்போது, ​​“திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர்களுடன் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சூரி மற்றும் அன்னா பென் போன்ற மிகவும் திறமையான நடிகர்களுடன் பணியாற்றுவது உற்சாகமாக இருக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in