நடிகர் சூர்யா தயாரித்த படம் ஓடிடியில் வெளியாகிறதா?

நடிகர் சூர்யா தயாரித்த படம் ஓடிடியில் வெளியாகிறதா?

’சூரரைப் போற்று’ இந்தி ரீமேக் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக வந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது.

நடிகர் சூர்யா, அபர்ணா பாலமுரளி, இந்தி நடிகர் பரேஸ் ராவல், கருணாஸ், ஊர்வசி உட்பட பலர் நடித்தபடம், ‘ சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்துக்கு சிறந்த நடிகர், நடிகை உட்பட 5 தேசிய விருதுகளும் கிடைத்தன.

ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. சூர்யா கேரக்டரில் அக்‌ஷய்குமார் நடிக்கிறார். அவர் மனைவியாக ராதிகா மதன் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து விக்ரம் மல்ஹோத்ராவின் அபண்டன்டியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அக்‌ஷய் குமாரின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதால், இந்தப் படமும் ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் இதை தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. ‘இந்தப் படம் இன்னும் தயாரிப்பில்தான் உள்ளது. திரையரங்கில் வெளியிட இருக்கிறோம். ஓடிடி ரிலீஸ் என்பதில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in