விஜய் பட நாயகிக்கு விரைவில் திருமணம்

விஜய் பட நாயகிக்கு விரைவில் திருமணம்
வருங்கால கணவருடன் காயத்ரி ரெட்டி

விஜய்யின் 'பிகில்' படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை காயத்ரி ரெட்டிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ல் அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான படம் 'பிகில்'. தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் 'பிகில்' பெண்களாக இந்திரஜா, வர்ஷா, ரெபா, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'பிகில்' கேர்ள்ஸ் கேங் என இது அந்த சமயத்தில் பேசப்பட்டது. ஒவ்வொருவருடைய கதா்பாத்திரத்திற்கும் ஒரு தனித்தன்மை என பரவலாக கவனிக்கப்பட்டது.

அந்த வகையில் இந்த படத்தில் காயத்ரியின் கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கவினின் 'லிஃப்ட்' படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன் பிறகு 'ஜீ தமிழ்' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சர்வைவர்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காயத்ரி வலிமையான ஒரு போட்டியாளராக பார்க்கப்பட்டார்.

இந்த நிலையில், தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 29ம்- தேதி தனக்கு நிச்சயம் நடந்ததை புகைப்படங்கள் பதிவிட்டு, 'நீயும் நானும் இறுதிவரை கைகோர்த்து வாழ்ந்திருப்போம்' என அழகான கேப்ஷனையும் கொடுத்திருக்கிறார் காயத்ரி.

மேலும், விரைவில் தனக்கு திருமணம் நடக்க இருப்பதை கூறியிருப்பவர் தன்னுடைய கணவர் பற்றிய அனைத்து விவரங்களையும் திருமணம் நெருங்கும் சமயத்தில் சொல்வேன் என்றும், அவருடைய ப்ரைவசிக்காகவே எந்த விவரத்தையும் அந்த புகைப்படத்தில் பதிவிடவில்லை எனவும் கூறி இருக்கிறார். மேலும், இது வீட்டில் பெரியவர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்று கூறி இருப்பவர், திருமணத்திற்கு பின்பு கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆக இருக்கிறார். ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார் காயத்ரி.

Related Stories

No stories found.