பிரபல ஹீரோ நடிப்பில் சினிமாவாகிறது ‘சக்திமான்’

பிரபல ஹீரோ நடிப்பில் சினிமாவாகிறது ‘சக்திமான்’

இந்தியாவின் சூப்பர்ஹீரோவாக 90-களில் புகழ்பெற்ற, ‘சக்திமான்’ தொடர் தற்போது திரைப்படமாக தயாராகிறது.

தூர்தர்ஷனில் வெளியான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று ’சக்திமான்’. 90-களின் சிறுவர்களை மொத்தமாகக் கட்டிப்போட்ட சூப்பர் ஹீரோ தொடர் இது. சிறுவர்களுக்கானது என்றாலும் பெரியவர்களும் இதை விரும்பிப் பார்ப்பதுண்டு. பிரபல இந்தி நடிகர் முகேஷ் கண்ணா, இந்தத் தொடரை தயாரித்து நடித்தார். அவருடன் வைஷ்ணவி மஹந்த், கிது கிட்வானி, சுரேந்திர பால், டாம் அட்லர், லலித் பரிமூ உட்பட பலர் நடித்திருந்தனர். தின்கர் ஜானி இயக்கி இருந்தார்.

சக்திமான் - முகேஷ் கண்ணா
சக்திமான் - முகேஷ் கண்ணா

1997 முதல் 2005-ம் ஆண்டுவரை தூர்தர்ஷனில் ஒளிபரப்பான இந்தத் தொடரை பார்க்க டிவி முன் தவமிருப்பார்கள், அந்தக் கால குட்டீஸ். அந்தத் தொடர், கரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காலத்தில் இந்தத் தொடர் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

இந்த தொடர் இப்போது சினிமாவாகிறது. இதை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனம் ட்விட்டரில் உறுதிப்படுத்தி உள்ளது. இந்தியாவின் பிரபல சூப்பர்ஸ்டார்களில் ஒருவர் சக்திமானாக நடிக்க இருக்கிறார். அவர் யார் என்பதை விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.

Related Stories

No stories found.