`மோசமான இந்திப் படங்களில் இருந்து என்னைக் காப்பாற்றுவது அதுதான்’: சோனு சூட் சொல்லும் ரகசியம்

`மோசமான இந்திப் படங்களில் இருந்து என்னைக் காப்பாற்றுவது அதுதான்’: சோனு சூட் சொல்லும் ரகசியம்

``மோசமான இந்திப் படங்களில் நடிப்பதில் இருந்து தன்னைத் தென்னிந்திய படங்கள்தான் காப்பாற்றுகிறது'' என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

தமிழில் ’கள்ளழகர்’ மூலம் நடிகராக அறிமுகமான சோனு சூட், தொடர்ந்து மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தியிலும் அதிகமான படங்களில் நடித்துள்ள சோனு சூட், இப்போது சாம்ராட் பிருத்விராஜ் என்ற படத்தில் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப் பதாவது:

கதைகளில் என் கேரக்டர் எப்படி இருக்கிறது என்பது பற்றிதான் பார்க்கிறேன். எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லை. மோசமான இந்திப் படங்களில் நடிப்பதில் இருந்து தென்னிந்திய படங்கள்தான் என்னைக் காப்பாற்றுகின்றன. கரோனா காலகட்டத்தில் நான் செய்த உதவிகளுக்குப் பிறகு எனக்கு பாசிட்டிவ் கேரக்டர்களே வருகின்றன. ஒரு நெகட்டிவ் கேரக்டர் கூட வரவில்லை.

இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நெகட்டிவாக நடித்த படம் ஒன்றில், எனக்கான காட்சிகளை மாற்றி ரீ ஷூட் செய்தார்கள். அந்தப் படத்தில் என் சட்டை காலரை பிடித்து இழுக்க வேண்டிய ஒரு நடிகர், அதை செய்ய மாட்டேன் என்றார். அப்படி செய்தால் ரசிகர்கள் திட்டுவார்கள் என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இது எனக்குப் புதிய இன்னிங்ஸ்.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in