சிவசங்கருக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்

சிவசங்கருக்கு உதவிக்கரம் நீட்டிய சோனு சூட்
சிவசங்கர், சோனு சூட்

இந்தியத் திரைப்படங்களில், பல மொழிகளில் நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு நடன வடிவமைப்பாளராக பணியாற்றிப் பல விருதுகளைப் பெற்றவர் சிவசங்கர். அதோடு ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘பரதேசி’, ‘அரண்மனை’ எனப் பல படங்களில் நடித்துள்ளார். இவர், தற்போது கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவருகிறார்.

ஆபத்தான நிலையில் கவலைக்கிடமாகச் சிகிச்சை பெற்று வரும் சிவசங்கர் மருத்துவச் செலவுக்குப் பண உதவி தேவைப்படுவதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதையடுத்து, கடந்த கரோனா காலகட்டத்தில் ஏராளமான மக்களுக்கு உதவிகளைச் செய்து வந்ததாகக் கூறப்பட்ட பாலிவுட் நடிகர் சோனு சூட், சிவசங்கர் மாஸ்டருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in