நடிகை மாயா
நடிகை மாயா

என் மகனின் கண், கைகளை எலி தின்றுவிட்டது; நடிகை மாயா கண்ணீர் பேட்டி!

Published on

என் மகனுக்கு உண்மையிலேயே ஹார்ட் அட்டாக்கா அல்லது உடன் இருந்தவர்கள் ஏதேனும் செய்துவிட்டார்களா என கேள்வி எழுப்பி நடிகை மாயா கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார்.

உயிரிழந்த விக்கி
உயிரிழந்த விக்கி

கவர்ச்சி நடிகை பாபிலோனாவின் அத்தை நடிகை மாயா. இவரது மகன் விக்னேஷ் அண்மையில் மர்மமான முறையில் மரணமடைந்தார். மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானது மட்டுமில்லாமல் பல்வேறு குற்ற வழக்குகளிலும் இவருக்கு தொடர்பு இருந்தது.

இந்த வழக்குகளின் பின்னணியில் கடந்த 2020-ம் ஆண்டு விக்னேஷை 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. 10 இடங்களில் வெட்டுப்பட்ட விக்னேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். விக்னேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,  விருகம்பாக்கம் போலீஸார் இவரை போக்கிரி பட்டியலில் சேர்த்தனர்.

விக்னேஷ் தசரதபுரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த விக்னேஷ் அண்மையில் தனது படுக்கையறையில்  மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற விருகம்பாக்கம் போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

பாபிலோனா விக்கி...
பாபிலோனா விக்கி...

மகனின் மரணம் குறித்து நடிகை மாயா இப்போது கண்ணீர் மல்க பேட்டிக் கொடுத்துள்ளார்.

அதில், “சில பிரச்சினைகள் காரணமாக விக்னேஷ் அதிகமாக குடித்துக் கொண்டிருந்தான். அது வேண்டாம் என்று நான் அறிவுரை கூறினேன். அதிகமாக குடித்ததால் என் மகனுக்கு உண்மையிலேயே ஹார்ட் அட்டாக் வந்ததா அல்லது உடன் இருந்தவர்களே ஏதேனும் செய்துவிட்டார்களா எனத் தெரியவில்லை.

என் மகனின் கண், கைகளை எலி தின்றுவிட்டது. அவன் எப்போது இறந்தான் என்றே தெரியவில்லை. என் மகனை ரெளடி என்று சொல்வதை நிறுத்துங்கள். அவன் தைரியமானவன்; தற்கொலை செய்து கொள்ளமாட்டான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் உண்மை தெரிய வரும்” எனக் கூறியுள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in