சோனம் கபூர் வீட்டில் கொள்ளையடித்து சொகுசு கார் வாங்கிய ஜோடி!

கைதுசெய்யப்பட்ட அபர்ணா ருத் வில்சன் - நரேஷ் குமார்
கைதுசெய்யப்பட்ட அபர்ணா ருத் வில்சன் - நரேஷ் குமார்

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் தனுஷுடன் ‘ராஞ்ஜனா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான இவர், கணவர் ஆனந்த் ஆகுஜாவுடன் டெல்லியில் வசித்து வருகிறார். அமிர்தா ஷெர்கில் மார்க்கில் உள்ள இவர்களது வீட்டில், கடந்த பிப்ரவரி 11-ம் தேதி, நகை மற்றும் பணம் கொள்ளை போனது. இதன் மதிப்பு 2.4 கோடி ரூபாய்.

சோனம் கபூர்
சோனம் கபூர்

இது தொடர்பாக சோனம் கபூர் தரப்பினர் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகை சோனம் கபூரின் மாமியாரைக் கவனித்துக்கொள்ளும் செவிலியர் அபர்ணா ருத் வில்சன் (31) அவர் கணவர் நரேஷ் குமார் சாகர் (31) மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸார் அவர்களைக் கைது செய்தனர்.

போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், கொள்ளையடித்த பணத்தில் அபர்ணா - நரேஷ் தம்பதி ‘ஹூண்டாய் ஐ10’ காரை வாங்கியது தெரியவந்தது. நகைகளை டெல்லி, கல்காஜியைச் சேர்ந்த தேவ் வர்மா என்பவரிடம் இருவரும் விற்றுள்ளனர். அவரிடம் இருந்து 100 வைரக்கற்கள், 6 தங்கச் சங்கிலி, வைர வளையல்கள் உட்பட 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை போலீஸார் மீட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in