தனுஷ் பட ஹீரோயினுக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

தனுஷ் பட ஹீரோயினுக்கு ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து

பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இந்தி நடிகை சோனம் கபூர். இவர் தனுஷுடன் ‘ராஞ்ஜனா’ (Raanjhanaa) என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் தமிழிலும் வெளியானது. இந்தி நடிகர் அனில் கபூரின் மகளான இவர் தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவை காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கணவர் ஆனந்த் ஆகுஜாவுடன் டெல்லியில் வசித்து வரும் சோனம் கபூர், கடந்த மார்ச் மாதம் தான் தாய்மை அடைந்திருப்பதாக அறிவித்தார். கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு இன்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சோனம் கபூரும் ஆனந்த் அகுஜாவும் வெளியிட்டுள்ளப் பதிவில், ‘’எங்களின் ஆண் குழந்தையை தலைகுனிந்து வரவேற்கிறோம். எங்களுக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள், நண்பர்கள், குடும்பத்தினருக்கு நன்றி. இது ஆரம்பம் மட்டுமே. நம் வாழ்க்கை எப்போதும் மாறும் என்பதை நாங்கள் அறிவோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தாத்தா ஆகியிருக்கும் நடிகர் அனில் கபூர், ’எங்கள் குடும்பத்தின் புதிய உறுப்பினரின் வருகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in