
நயன்தாரா நடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் சில காட்சிகள் ரீ ஷூட் செய்யப்பட்டு வருகின்றன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம், ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. முக்கோண ரொமான்டிக் காமெடி படமான இதில், கலா மாஸ்டர், பிரபு, சீமா, ரெடின் கிங்ஸ்லி, கிரிக்கெட் வீர ஸ்ரீசாந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை எஸ்.எஸ்.லலித்குமாருடன் இணைந்து தனது ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்துள்ளார் விக்னேஷ் சிவன். ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
இதற்கிடையே இந்தப் படத்தின் சில காட்சிகளை, மீண்டும் படமாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிரப்பள்ளியில் நடிகை சமந்தா தொடர்பான காட்சிகளை ரீஷூட் செய்த படக்குழு, இப்போது விஜய் சேதுபதி, சமந்தா நடிக்கும் காட்சிகள் சிலவற்றை ரீஷூட் செய்து வருவதாகவும் இதற்காக விஜய் சேதுபதி சில நாட்கள் கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.