அடேயப்பா.. இந்த ஆண்டின் இறுதியில் இத்தனைப் படங்கள் ரிலீஸா?

அடேயப்பா.. இந்த ஆண்டின் இறுதியில் இத்தனைப் படங்கள் ரிலீஸா?

இந்த ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் எத்தனை படங்கள் வெளியாகும் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரில் அதிக படங்கள் வெளியாகி வருகின்றன. அதன் அடிப்படையில் நாளை (டிசம்பர் 2) 'கட்டாகுஸ்தி', 'டிஎஸ்பி', 'தெற்கத்திவீரன்', 'மஞ்சகுருவி' ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன.

நடிகர் வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்', 'வரலாறு முக்கியம்' போன்ற படங்கள் டிச. 9-ம் தேதி வெளியாகின்றன. 'அகிலன்', 'லத்தி' போன்ற படங்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியாகிறது. ஏற்கெனவே வெளியாக வேண்டிய 'தமிழரசன்', 'இடம் பொருள் ஏவல்' போன்ற திரைப்படங்களும் இந்த மாதத்தில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, 'பிசாசு 2', 'டிரைவர் ஜமுனா', 'ஏழு கடல் ஏழுமலை', 'இடி முழக்கம்' போன்ற திரைப்படங்களையும் இந்த மாதத்தில் படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளனர் .

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in