`அவருடன் சேர்ந்து நடனமாடும் ஒரு பாடல் கூட இல்லை'- `SK22' அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்SK22: அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து சாய்பல்லவியுடன் நடிக்கும் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அஸ்வின் மடோனா இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தினை முடித்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வரக்கூடிய நிலையில், இதற்கடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய்பல்லவியுடன் தனது 22-வது நடிக்க இருக்கிறார். இந்தப் படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படம் குறித்து சமீபத்தில் நடந்த விருது விழா ஒன்றில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘என்னுடைய அடுத்தப் படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் என்பது உறுதிதான். இந்தப் படத்தில் நானும் அவரும் சேர்ந்து நடனம் ஆடும்படி ஒரு பாடல் கூட இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in