சிவகார்த்திகேயனின் புதிய படம்: ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிறது

#SK20
சிவகார்த்திகேயனின் புதிய படம்: ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகிறது

சிவகார்த்திகேயனின் பெயரிடப்படாத அடுத்த திரைப்படம், ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது.

கடந்தாண்டு மார்ச்சில் வெளியாகி வெற்றி பெற்ற தெலுங்கு திரைப்படம் ’ஜதி ரத்னாலு’. இதன் இயக்குநர் அனுதீப், சிவகார்த்திகேயனின் புதிய இருமொழி திரைப்படத்தை இயக்க உள்ளார். இசையமைப்பாளர் தமன் உடன் முதல் முறையாக சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கைகோர்க்கிறார்.

’டாக்டர்’ திரைப்படத்தின் வெற்றியை அடுத்து சிவகார்த்திகேயனின் ’டான்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதற்கிடையே தனது அடுத்த திரைப்படத்தினை இருமொழியில் முடிவு செய்துள்ளார். படத்தை தயாரிக்கும் சுரேஷ் புரடக்‌ஷன்ஸ் சுரேஷ் பாபு என்பவர், பாரம்பரியமான தயாரிப்பு நிறுவனத்தின் வாரிசு. இவர், சிவாஜி கணேசன் நடித்த வசந்த மாளிகை திரைப்படத்தின் தயாரிப்பாளரான ராமாநாயுடுவின் மகன்.

சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே ரொமான்ஸ், ஆக்‌ஷன், சென்டிமென்டுக்கு அப்பால் காமெடிக்கும் முக்கியத்துவம் இருக்கும். ஜதிரத்னாலு இயக்குநர் அனுதீப்பும், தனது திரைப்படத்தின் காமெடிக்காகவே கொண்டாடப்பட்டவர். இருவரும் இணைய இருப்பதால் சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தில், நகைச்சுவை விருந்துக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள். கதை முழுக்கவும் புதுச்சேரியை பின்னணியாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதால், தெலுங்கை விட தமிழுக்கு நெருக்கமாக இருக்கும். புதிய திரைப்படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவராதபோதும், புஷ்பாவில் கவனம் ஈர்த்த ராஷ்மிகா நடிக்க உள்ளதாக தெரிகிறது.

பொங்கல் முடிந்த பிறகு சிவகார்த்திகேயனின் 20வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in