மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் விதார்த்தும்!

மிஷ்கின் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் விதார்த்தும்!

வித்தியாசமான திரைமொழி கொண்ட திரைப்படங்களை தன்னுடைய அடையாளமாகக் கொண்டிருப்பவர் மிஷ்கின். இவர் தற்போது ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி நடிப்பில் ‘பிசாசு-2’ திரைப்படத்தை இயக்கிவருகிறார். இத்திரைப்படத்துக்குப் பிறகு, விஜய் சேதுபதியை வைத்து அடுத்த படத்தை மிஷ்கின் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மிஷ்கினின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ‘பிசாசு-2’ திரைப்படத்தின் தயாரிப்பாளரான முருகானந்தம் மிஷ்கினின் அடுத்த திரைப்படத்தையும் தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விதார்த்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in