எஸ்.ஜே.சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கடமையை செய்- எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த்

எஸ்.ஜே.சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ’கடமையை செய்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா இப்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஹீரோ மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். சிம்புவின் 'மாநாடு' படத்தில் அவர் நடிப்பு பாராட்டப்பட்டது. இதையடுத்து ராதா மோகன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்துள்ள ’பொம்மை’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

கடமையை செய்- எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த்
கடமையை செய்- எஸ்.ஜே.சூர்யா, யாஷிகா ஆனந்த்

இந்நிலையில் அவர் நடித்துள்ள, ‘கடமையை செய்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. கணேஷ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப்படத்தில், யாஷிகா ஆனந்த் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், இராஜசிம்மன், மோகன் வைத்யா உட்பட பலர் நடித்துள்ளனர்.

டி.ஆர்.ரமேஷ், ஜாகிர் உசேன் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 24-ம் தேதி வெளியாகிறது. படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் வெளியிடுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in