'மார்க் ஆண்டனி' படத்திற்காக எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல் லுக் வெளியீடு

'மார்க் ஆண்டனி' படத்திற்காக  எஸ்.ஜே.சூர்யாவின் மிரட்டல்  லுக் வெளியீடு

'மார்க் ஆண்டனி' படத்தில் நடிக்குர் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் புதிய லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக இயக்கும் படம் மார்க் ஆண்டனி. கதாநாயகனாக நடிகர் விஷால் நடிக்கிறார். ரிதுவர்மா கதாநாயகியாக நடிக்கிறார். நடிகரும், இயக்குருமான எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் விஷாலின் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அதில் அவர், தாடி, மீசையுடன் கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு முற்றிலும் புதிய தோற்றத்தில் காட்சியளித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது.

இந்த நிலையில், 'மார்க் ஆண்டனி' படத்தில் நடிக்கும் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் புதிய லுக் போஸ்டராக வெளியாகியுள்ளது. ஜாக்கி பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டு, நீளமான மீசையுடன், பெல்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு ரெட்ரோ லுக்கில் காட்சியளிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in