விபத்தில் சிக்கிய பிரபல நடிகை உயிரிழப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை உயிரிழப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி

கார் விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகை உயிரிழந்தார்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் (53). இவர் வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் டேஸ் செவன் நைட்ஸ், சைக்கோ, கேட் பைட், தி லாஸ்ட் வேர்ல்ட் உட்பட பல படங்களில் நடித்துள்ளதோடு, சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். 'அனதர் வேர்ல்ட்' என்ற அமெரிக்க டிவி தொடரில் இரண்டு கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர்.

இவர், கடந்த 5-ம் தேதி தனது காரில் சென்று கொண்டிருந்தபோது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், முதுகு உள்ளிட்ட பகுதியில் பலத்த தீக்காயம் அடைந்த அன்னேவுக்கு, மூளையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மது அருந்தி விட்டு அதிவேகமாக கார் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

இதனிடையே, கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த அன்னே நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் ஹாலி பெயர்ட் தெரிவித்துள்ளார். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அவருக்கு ஹோமர் லப்பூன், அட்லஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in