பிரின்ஸ் ரிலீஸ்: சிவகார்த்திகேயன், சத்யராஜ் வெளியிட்ட பில்டப் வீடியோ!

பிரின்ஸ் ரிலீஸ்: சிவகார்த்திகேயன், சத்யராஜ் வெளியிட்ட பில்டப் வீடியோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தெலுங்கில் ‘ஜதி ரத்னாலு’ என்ற காமெடி படத்தை இயக்கியவர் கே.வி.அனுதீப். இவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார். பிரின்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உக்ரைனைச் சேர்ந்த மரியா ரியபோஷப்கா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. தமன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். ரொமான்டிக் காமெடி கதைக்களம் கொண்ட இப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகிறது.

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கான அறிவிப்பை சிவகார்த்திகேயன், சத்யராஜ், இயக்குநர் அனுதீப், மரியா ஆகியோர் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.

அந்த வீடியோவில், அனுதீப், சிவகார்த்திகேயன், சத்யராஜ், மரியா ஆகியோர், ’ஈவு இரக்கம்’ என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு காமெடியாக பேசுகின்றனர்.

பின்னர் சத்யராஜ், “படத்தை எப்ப, எங்க ரிலீஸ் பண்ணப் போறீங்க? ” என்று கேட்கிறார். அதற்கு இயக்குநர் அனுதீப், “தெலுங்கு, தமிழ் இல்லாம ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அண்டார்டிகா... ஆனால் ஆப்கானிஸ்தான்ல தியேட்டர்ல இல்ல சார்” என்கிறார். உடனே, சிவகார்த்திகேயன், “கஜகஸ்தான்ல டிஸ்ட்ரிபியூட்ட்ரே இல்லை” என்கிறார்.

அடுத்து அனுதீப், “உஸ்பெகிஸ்தான்ல மார்க்கெட் இல்லை” என்று சொல்கிறார். உடனே சத்யராஜ், “அண்டார்டிகாவுல மனுஷங்க இல்லை. அதனால தமிழ், தெலுங்குல மட்டும் ரிலீஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்” என்கிறார் . “சமூகத்துல வன்முறை அதிகமாக இருக்கு, யாருக்குமே ஈவு இரக்கமே இல்ல” என்று அனுதீப் மீண்டும் ஆரம்பிக்க, “யோவ் எப்பப் பார்த்தாலும் ஈவு இரக்கம், ஈவு இரக்கம்னு டார்ச்சர் பண்ணிட்டே இருக்கே, ஏங்க நீங்க அறிவிப்பை போடுங்க” என்கிறார் சிவகார்த்திகேயன்.

தீபாவளி ரிலீஸ் என்கிற அறிவிப்பு வீடியோவில் வெளியாகிறது. ஜாலியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் இப்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in