சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: தலைவரானார் சிவன் சீனிவாசன்

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: தலைவரானார் சிவன் சீனிவாசன்

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் சிவன் சீனிவாசன் தலைவராக வெற்றி பெற்றார்.

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலுக்கு மூன்று வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். இந்த முறை நடந்த தேர்தலில் மூன்று அணிகள் போட்டியிட்டன. தற்போதைய தலைவர் ரவிவர்மா தலைமையில் ஓர் அணியும், முன்னாள் தலைவர் சிவன் சீனிவாசன் தலைமையில் ஓர் அணியும் புதிதாக, ஆதித்யா தலைமையில் ஓர் அணியும் போட்டியிட்டன.

விருகம்பாக்கத்தில் நேற்று நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 1,600 வாக்குகளில் 785 வாக்குகள் பதிவாகின. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில் சிவன் சீனிவாசன் வெற்றிபெற்று தலைவர் ஆனார். அவர் மூன்றாவது முறையாக தலைவராக வெற்றிபெற்றுள்ளார்.

செயலாளராக போஸ் வெங்கட், பொருளாளராக ஜெயந்த் ஆகியோரும் தேர்வானார்கள். துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்று மாலை முடிவுகள் தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in