நடிகர் கார்த்தியுடன் மோதுகிறார் சிவகார்த்திகேயன்!

நடிகர் கார்த்தியுடன் மோதுகிறார் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்தியேன் நடித்து வரும் ’எஸ்கே 20’ திரைப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கில் ‘ஜதி ரத்னாலு’ என்ற காமெடி படத்தை இயக்கியவர் கே.வி.அனுதீப். இவர் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வருகிறார். இது அவருக்கு 20-வது திரைப்படம். இதில், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகிறது, இந்தப் படம். தென்னிந்திய இளைஞரை வெளிநாட்டுப் பெண் காதலிப்பதைப் போன்ற கதையைக் கொண்ட இதில் உக்ரைனைச் சேர்ந்த மரியா ரியபோஷப்கா ஹீரோயினாக நடிக்கிறார்.

ஸ்ரீவெங்கடேஷ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. தமன் இசை அமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நவீன் பொலிஷெட்டி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் காரைக்குடியில் தொடங்கியது. இதன் 90 சதவீதப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அறிவித்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.

அதே தேதியில், கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படமும் ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in