புதுச்சேரி முதல்வரிடம் சிவகார்த்திகேயன் கோரிக்கை

புதுச்சேரி முதல்வரிடம் சிவகார்த்திகேயன் கோரிக்கை
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்தார் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன், புதுச்சேரி முதல்வரிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன், இப்போது தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நேரடி தெலுங்கு படமான இது தமிழிலும் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயனின் 20 -வது படமான, இதில் உக்ரைன் நடிகை மரியா, நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பிரேம்ஜி அமரன், நவீன் பொலிஷெட்டி உட்பட பலர் நடிக்கின்றனர்.

காரைக்குடியில் தொடங்கிய இந்தப் படத்தின் அடுத்த ஷெட்யூல் புதுச்சேரியில் நடக்க இருக்கிறது. இதற்காக சிவகார்த்திகேயன் புதுச்சேரி சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவர் மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை அவர் அலுவலகத்தில் நேற்று சந்தித்தார்.

அப்போது அவர், புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். புதுச்சேரியில், படப்பிடிப்புக்கான வரி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in